இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம்!


இந்தியா இராணுவநடவடிக்கைகளில் ஈடுபடுமானால் பாக்கிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தொலைக்காட்சி மூலம் பாக்கிஸ்தான் மக்களிற்கு ஆற்றிய உரையில்  அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்
காஸ்மீர் தாக்குதலில் பாக்கிஸ்தான் தொடர்புபட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இந்தியாவை இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார்
எந்த வித ஆதாரங்களையும் முன்வைக்காமல் பாக்கிஸ்தான் மீது குற்றம்சாட்டுவதை இந்தியா கைவிடவேண்டும் என இம்ரான்கான் கேட்டுக்கொண்டுள்ளார்
நீங்கள் பாக்கிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொண்டால் பாக்கிஸ்தான் திருப்பி தாக்காது என கருதவேண்டாம்  பாக்கிஸ்தான் நிச்சயம் திருப்பி தாக்கும் என  இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
காஸ்மீர் தாக்குதல் குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் எனவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்
பாக்கிஸ்தானிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டும்  என்ற கோரிக்கை இந்தியா தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் வெளியாவை சுட்டிக்காட்டியுள்ள இம்ரான் கான்  கடும் நடவடிக்கைகள் தங்களிற்கு வாக்குகளை கொண்டுவரும் என அரசியல்வாதிகள் நம்புகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment