சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அத்தை - அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 9 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 36 வயதான பெண்ணை பொலிசார் கைது செய்தனர்.
கேரளாவில் சமீபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது பாதிக்கப்பட்ட சிறுவன் தன்னை ஒரு பெண் பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மருத்துவர் புகார் அளித்தார். மருத்துவமனைக்கு வந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுவனிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர்.
பிறகு சிறுவன் குற்றம்சாட்டிய பெண்ணை அவர்கள் கைது செய்தனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து குழந்தை நல அதிகாரிகள் கூறும் போது, கைது செய்யப்பட்ட பெண், பாதிக்கப்பட்ட சிறுவனை சுமார் ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இது சிறுவனது மனநிலையை பெரிதும் பாதித்துள்ளது. சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பெண், அவனது சொந்த மாமாவின் மனைவி ஆவார்.
அவர் சிறுவன் வீட்டுக்கு அருகில் வசித்து வந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய பொலிசார், சிறுவன் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், சிறுவனின் பெற்றோருக்கும், சம்மந்தப்பட்ட பெண் வீட்டுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் குற்றச்சாட்டு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment