மன்னார் புதைக்குழி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது!





மன்னார் மனித புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அமெரிக்க கார்பன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் கார்பன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, கையளிக்கப்பட்டது.

அது தொடர்பான அறிக்கை கடந்த 16ம் திகதி தமக்கு கிடைத்ததாக, மன்னார் மனித புதைக்குழி அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவித தகவல்களையும் வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், அமெரிக்க கார்பன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment