ஒஸ்கார் விருதை பெற்ற நடிகர் மற்றும் நடிகை!



ஒஸ்கார் விருது வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

காலை 07 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் 1970களில்,  நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஒஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட  8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும். 

சிறந்த நடிகருக்கான விருதை  அமெரிக்காவின் ரமி மலிக்  பெற்றுக் கொண்டதுடன், சிறந்த நடிகையாக இங்கிலாந்தின்  ஒலிவியா கொல்மன் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



2019 ஆஸ்கர் விருதுகள் பட்டியல்
சிறந்த திரைப்படம்  - க்ரீன் புக்
சிறந்த இயக்குனர் – அல்போன்சோ குரான், (ரோமா)
சிறந்த நடிகை – ஒலிவியா கோல்மன் (தி ஃபேவரிட்)
சிறந்த நடிகர் -  ரமி மலிக் (பொஹிமியன் ராப்சோடி)
சிறந்த துணை நடிகை – ரெஜினா கிங், ( If Beale Street Could Talk)
சிறந்த துணை நடிகர் – மஹர்ஷாலா அலி (க்ரீன் புக்)
சிறந்த வெளிநாட்டுப் படம் – ரோமா (மெக்சிகோ)
சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் Into The Spider-Verse
சிறந்த திரைக்கதை  - க்ரீன் புக்
சிறந்த தழுவல் திரைக்கதை – பிளாக்லான்ஸ்மேன்
சிறந்த பின்னணி இசை – ப்ளாக் பேந்தர்
சிறந்த பாடல் – ஷாலோ (ய ஸ்டார் இஸ் பார்ன்)
 சிறந்த ஆவணப்படம் – ஃப்ரீ சோலோ
சிறந்த குறும்படம் – பீரியட் என்ட் ஆஃப் சென்டன்ஸ்
சிறந்த லைவ் ஆக்ஷன் ஷார்ட் – ஸ்கின்
சிறந்த அனிமேட்டட் ஷார் – பாவோ
சிறந்த ஒளிப்பதிவு – அல்போன்சோ குரான் (ரோமா)
சிறந்த தயாரிப்பு – ப்ளாக் பேந்தர்
சிறந்த காஸ்ட்யூம் டிசைன் – ப்ளாக் பேந்தர்
சிறந்த மேக் அப் – வைஸ்
சிறந்த சவுண்ட் எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோதி
சிறந்த சவுண்ட் மிக்ஸிங் – பொஹிமியான் ராப்சோதி
பெஸ்ட் விசுவல் எஃபெக்ட்ஸ் – ஃபர்ஸ்ட் மேன்

சிறந்த எடிட்டிங் – பொஹிமியான் ராப்சோதி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment