யானைகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு கோரி, மட்டக்களப்பு – தொப்பிகல மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது.
குறித்த கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள மாமியாரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரென வழிமறித்த காட்டு யானை பெண்ணைத் தாக்கியது.
இவ்வாறு கிரான் பிரதேச செயலர் பிரிவில் யானைகளால் பல உயிரிழப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
“யானைகளை சரணாலயத்தில் விடு இல்லையேல் எங்களை சரணாலயத்தில் அடைத்து வை, தமிழ் அரசியல்வாதிகள் யானையுடன் கொண்டாட்டம் தமிழ் மக்கள் யானைகளால் திண்டாட்டம், ஆற்றிலும் காட்டிலும் சாகும் எங்களைக் காப்பாற்றுங்கள்.
எங்கள் உயிர்கள் மிருகங்களுக்கு பலி கொடுக்கவா, யானைகளால் தொடரும் உயிரிழப்பை தடுத்து நிறுத்துங்கள்“ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்ட நிறைவில், மட்டக்களப்பு மாவட்டச் செயலருக்காக மனு கோராவெளி வட்டார மக்கள் பிரதிநிதி காளிக்குட்டி நடராஜா பிரதேச செயலர் எஸ். ராஜ்பாபுவிடம் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment