காணாமல் போன இளைஞன் ; நீர்தேக்கத்தில் தேடுதல்

மஸ்கெலியா பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இளைஞன் மவுசாகலை நீர்தேக்கத்தில் பாய்ந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


மஸ்கெலியா தபால் நிலையத்திற்க்கு அருகாமையில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞனே காணாமல் போயுள்ளதாக இளைஞனின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில்
நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.நேற்றிரவு இளைஞனுக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. அதன் பின்னர் இளைஞன் வெளியில் சென்றுள்ளார்.  வெளியில் சென்ற இளைஞனை காணவில்லை என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் பாதணி  ஒன்று மவுசாகலை நீர்த் தேக்கத்திற்க்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளது.


அதனால் இளைஞன் நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment