பாடசாலை அதிபர் தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்து, அதிபருக்கு எதிராக மாணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு மாணவனுக்கு வலய கல்வி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் , இல்லையேல் உயர்தர பரீட்சைக்கு அனுமதி தரப்படா மாட்டாது என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தீவக வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் மாணவன், கடந்த திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற போது , ஒழுக்கமான முறையில் முகச்சவரம் செய்யவில்லை எனக் கூறி பாடசாலை அதிபரால் தாக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் ஊர்காவற்துறை மருத்துவமனையில், கடந்த இரண்டு நாள்களாக தங்கி சிகிச்சை பெற்றுள்ளார்.
தன் மீது தாக்குதல் மேற்கொண்ட அதிபருக்கு எதிராக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் மாணவன் இன்று முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
அதனை அறிந்த வலயக் கல்வி திணைக்கள அதிகாரிகள், குறித்த மாணவனை தொடர்பு கொண்டு அதிபருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப் பெறுமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
முறைப்பாட்டை மீளப் பெற்றாலே உயர்தர பரீட்சை அனுமதிக்கு விண்ணப்பிக்க அனுமதிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.
சம்பவத்தினால் மாணவன் மிகுந்த மன அழுத்தத்துக்கு உட்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment