புல்வாமா தாக்குதல் தொடர்பில் ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கை!
காஷ்மீர் புல்வாமா மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியா,பாகிஸ்தான் இருத்தரப்பினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் ஆராயவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம் என்றும், விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில், இந்திய துணை இராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்ககன் கேள்விக் பதிலளிக்கும் போது ட்ரம்ப்  கூறியதாவது,
ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் இந்திய வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம். அங்கு நிலவும் சூழலை நான் தொடர்ந்து அறிந்து வருகிறேன். அது தொடர்பாக ஏராளமான விவரங்களும் வந்துள்ளது.நாங்கள் சரியான நேரத்தில் இது குறித்து எங்களின் கருத்தை தெரிவிப்போம். அதே சமயம் இந்தியாவும், பாகிஸ்தானும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இணைந்து விசாரணையை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறையின் இணை செய்தி தொடர்பாளரான ராபர்ட் பல்லாடினோ, தீவிரவாத தாக்குதலில் இந்தியாவுக்கு தான் தங்களது ஆதரவு என்று உறுதிபடக் கூறியுள்ளார். தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment