பிரதமருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான வழக்கு  விசாரணைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த மனு இன்று  மேன்முறையீட்டு நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு மீதான விசாரணைகளிலிருந்து நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று விலகியிருந்தார். தனிப்பட்ட காரணத்தினால் அவ்வழக்கு விசாரணையிலிருந்து அவர் விலகியுள்ளதாக தொிவிக்கப்பட்டிருந்தது.
அரச நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி பணம் ஈட்டும் வரையறுக்கப்பட்ட லேக் ஹவுஸ் அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் தனியார் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதனால், அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்க முடியாது என தெரிவித்து கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோனவல, பிரதமருக்கு எதிரான மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment