ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிராந்திய மாநாடு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ன யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இன்று காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வு இடம்பெற்றது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

ஈழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து போராளிகள் மற்றும் பொது மக்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச் சந்திரன், கட்சியின் செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், மன்னார் நகர சபையின் உறுப்பினர் சம்பூரணம் இரட்ணசிங்கம் உட்பட கட்சியின் அமைப்பாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment