பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசாந் பெர்னாண்டோவுக்கு எதிராக  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா  முறையீடு செய்துள்ளார்.

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

”மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ள பொலிஸார், தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்கும் செய்பாட்டைச் செய்யக் கூடாது. சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.” என்று அந்த  முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment