மூன்று மாவீரர்களின் தாய் மரணம்!

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையைத் தேடியலைந்த  தாய் ஒருவர் மாரடை ப்பால் காலமாகியுள்ளார்.
மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச் சேர்ந்த வேலு சரஸ்வதி என்பவரே இவ் வாறு நேற்று காலமாகியுள்ளார்.

இவர்,வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயார் ஆவார்.
கடற்புலி போராளியான சுவித்தா எனும் அவரது மகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
காணாமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந் த அவர், தற்பொழுது மரணத்தை தழுவியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின்போதும் அதற்கு பிற்பட்ட பாலப் பகுதியிலும் இராணுவத்தினரால் பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட் டனர்.
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் அவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் மூலம் எந்தவித தீர்வையும் பெறாது, தமது வாழ்நாளையே பலர் போராட்டத்திலேயே முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment