அதிர்ச்சியுடன் தோனி செய்த செயல்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் டோனி. இந்தியா மட்டும் அல்லாது உலக அளவிலும்  ரசிகர்களை கொண்டுள்ள டோனியின் தனித்துவமான செயல்பாடுகள் அவ்வப்போது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.


டோனியின் இவ்வாறான செயல்பாடுகள் சமூக வலைதளங்களிலும்  வைரலாகி விடும். இந்த வரிசையில், தேசியக்கொடி மீது டோனி காட்டிய மதிப்பு  சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்படுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது டோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் அத்து மீறி கையில் தேசியக்கொடியுடன்   ஓடி வந்த ரசிகர் ஒருவர் டோனியின் காலில் விழுந்து ஆசி பெற முயன்றார். அப்போது தேசியக்கொடி மைதானத்தில் கீழே விழுமாறு இருந்தது. துரிதகதியில் செயல்பட்ட டோனி தேசியக்கொடியை தனது கைகளில் வாங்கிக் கொண்டு, ரசிகரை அனுப்பி வைத்தார்.

தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment