நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஜே.வி.பி. நாளை முக்கிய பேச்சு நடத்தவுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறும் என்றும், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்நெத்தி ஆகிய எம்.பிக்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் ஜே.வி.பியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கியுள்ளது.
#JVP #20thAmendment #SrilankaPolitics #MahindaRajapaksa #MaithripalaSirisena #RanilWickramasinghe #AnurakumaraDissanayake #Sampanthan #Parliament #NewConstitution #TamilNewsKing
0 comments:
Post a Comment