இந்தோனேஷியா-பபுவா மாகாணத்தில் நேற்றுப் பெய்த கனமழையினால் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு மாகாணமான பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானி பகுதியில் பெரும் மழை பெய்தது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த கனமழைக்கு 42 பேர் பலியானதாகவும், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த மீட்புப்பணியில் தீவிரமாக இறங்கியுள்ள மீட்புப்படை அதிகாரிகள், இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்தோனேஷியாவில் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைகாலம் ஆகும்.
கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் பெய்த மழை மற்றும் நிலச்சரிவில் 70 பேர் பஉயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment