பொள்ளாச்சி விவகாரத்தில் முழுவீச்சில் நக்கீரன் விசாரணை???

பொள்ளாச்சி விவகாரம் வெளியே வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது நக்கீரன் வெளியிட்ட வீடியோதான். இதுபோன்று இன்னும் பல வீடியோக்களை அந்த அயோக்கியர்களிடம் இருந்து போலீஸார் கைபற்றியுள்ளனர்.


இந்நிலையில், ஒரு பெண் கதறும் வீடியோவை இப்படி வெளியிட்டது ஏன் என நக்கீரன் கோபாலிடம் கேட்ககப்பட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது, குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது. எந்த நோக்கத்திற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டதோ, அது தற்போது நடந்துள்ளது.

மேலும், பொள்ளாச்சி விவகாரத்தை இப்படியே விடப்போவது இல்லை. இந்த கொடுமையை குறித்து நாங்களும் தனியாக விசாரித்து வருகிறோம். எங்களது விசாரணை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான முழு பின்னணியையும் விரைவில் நக்கீரன் வெளியிடும் என்ற பகீர் தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment