சினிமாவில் நடிக்க வரும் பெண்களை ஆசைகாட்டி தொழிலதிபர் செய்த அதிர்ச்சி செயல்!தமிழகத்தில் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி, இளம் பெண்களுக்கு ஆசை காட்டி அவர்களை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர், 7வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சினிமா தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து செல்வதாக குடியிருப்புவாசிகள் விரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனால் அப்பகுதிக்கு வந்த பொலிசார், சாதரண உடையில் அங்கு வந்து என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
அப்போது, சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு இளம் பெண்கள் மற்றும் வசதிப்படைத்தவர்கள் வந்து செல்வது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த குடியிருப்பில் இருக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்குள் புகுந்த பொலிசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அறைகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து பொலிசார் சாலிகிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜபெருமாள், நாமக்கல் பகுதியை சேர்ந்த அவரது உதவியாளர்கள் பாலாஜி, மதுரவாயல் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து 3 இளம்பெண்களையும் மீட்டனர்.
அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், ராஜபெருமாள் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அருக்கானி மூவிஸ் என்ற பெயரில் பெயர் பலகை வைத்து சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளார்.
நடிக்கும் ஆசையில் வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களை மூளைச்சலவை செய்து புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கொடுப்பதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலுக்குள் தள்ளி பல லட்சம் சம்பாதித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இது போன்று 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சினிமா படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலுக்குள் ஈடுபடுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதால், இவர் இன்னும் எத்தனை பெண்கள் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்கள் என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment