நடிகை குஷ்பு எந்த தொகுதியில் போட்டியிட விரும்புகிறார் தெரியுமா?பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு திருச்ச தொகுதி தனக்கு வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 18-ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுப்பது இன்றுடன் முடிவடைகிறது.
கடைசி நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். திமுகவுடன் தமிழ்நாட்டில் கூட்டணி வைத்துள்ள காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசு போட்டியிட விரும்புவதாகவும், அதே போன்று வைகோவும் இதே தொகுதியை தான் கேட்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இதே தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு மனு கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குஷ்பு இதற்கு முன்பு தென்சென்னையை கேட்டு பார்த்தார். அங்கு கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலமானவர்கள் இருப்பதால் அவருக்கு மறுக்கப்பட்ட நிலையில் குஷ்பு இப்போது திருச்சியில் போட்டியிட மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் திருநாவுக்கரசு டெல்லி லாபி மூலமாக இதே தொகுதியை கேட்டு கொண்டிருக்கிராராம். முன்னாள் அமைச்சர் நேருவிடமும் ராகுல்காந்தியிடம் இது சம்பந்தமான தனது விருப்பத்தை நேரடியாகவே தெரிவித்து அதற்கான முயற்சியிலும் இறங்கியிருப்பதாக கூறப்படுவதால், திருச்சி தொகுதி இப்போது குஷ்புவுக்கா இல்லை திருநாவுக்கரசுக்கா என்ற போட்டி நிலவி வருகிறதாம்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment