பிரியாமணி எடுத்த முடிவு

மாணவிகள் அவர்களது கல்வியைத் தொடர, மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடவுள்ளார் தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி.

சேவை நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதாரம், மாதவிலக்கு பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றுக்காகத் தொண்டாற்றி வருகிறார் பிரியாமணி. 

பள்ளிகளில் சரியான முறையில் மலசலகூடம்  இல்லாதது, மாதவிலக்கு சுகாதாரம் பற்றிய சிக்கல் ஆகிய காரணங்களால் பல மாணவிகள் அவர்களது படிப்பை பாதியில் விட்டுவிடுவது அதிகரித்து வருகிறது. 

பல இடங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் இருக்கிறது. ஒரு பெண்ணாக இந்த விஷயத்தில் பணியாற்றுவது என் கடமை என்கிறார் பிரியாமணி

மே மாதம் 19 ஆம் திகதி பெங்களூரில் நடைபெற உள்ள 10 கி.மீ.  மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுவது என்னால் ஆன ஒரு சிறு உதவி. 

இது போன்ற விஷயங்களுக்கு பலர் முன்வந்து ஆதரவு தந்து பல மாணவிகள் படிப்பைத் தொடர உதவ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment