திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கு - சமரசம்!ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக போலி ஆவணத்தை தயாரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இரு தரப்பினரும் சமரசமாக இணங்கியுள்ளதாக பிரதிவாதி மற்றும் முறைப்பாட்டாளரும் இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாரச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே மேற்குறிப்பிட்ட விடயம் அறிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த சமரசம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அடுத்த மாதம் 4 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment