பா.ஜ.வில் இணையும் ஜெயப்பிரதா

ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த நடிகை ஜெயப்பிரதா, பா.ஜ.வில் இணைந்துள்ளார். இதற்கு முன் பல கட்சிகளில் இருந்த ஜெயப்பிரதா, 1994 அம் ஆண்டு முதல் முறையாக தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்ததன் மூலம் அரசியலில் நுழைந்தார். 

2014 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் தொகுதியில்  போட்டியிட்ட ஜெயப்பிரதா நான்காம் இடம் பிடித்து தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் அவர் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. 

தென்னிந்தியத் திரையுலகில் இருந்து கர்நாடகாவில் சுமலதா, பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் மேலும் ஒரு தென்னிந்திய நடிகையாக ஜெயப்பிரதா தேர்தல் களத்தில் குதிக்க உள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment