இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கு வெளியில் - குறிப்பாகக் கொழும்பில் - தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன. சில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்.
இவ்வாறு கூறியிருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.
கொழும்பு - பம்பலப்பிட்டி சனசமூக நிலைய மத்திய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் வருடாந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 comments:
Post a Comment