தகவல் தொழில்நுட்ப துறையை விருத்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் மூன்று மாதங்களில் அமுலுக்கு வரும் வகையில் இரு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
'சைபர் பாதுகாப்பு சட்டம்' மற்றும் 'தரவு பாதுகாப்பு சட்டம்' ஆகிய இரண்டு புதிய சட்டங்களே அறிமுகப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
நவீன தகவல் தொழில்நுடப் துறையில் தகவல்களை பாதுகாப்பதில் நிலவும் குறைபாடுகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பத்தால் இடம்பெறக்கூடிய பல்வேறு துறைசார் பாதகமான விடயங்களை தவிர்த்து, பாதுகாப்புடன் கூடிய புதிய விதிமுறைகளை கையாளும் வகையில் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment