விஷம் கொடுத்து பேராசிரியை கொலை!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடம்பெற்ற பேராசிரியர் ஒருவரின் கொலை வழக்கில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நேற்றையதினம் வாயில் இரத்தம் வழிந்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்  திவ்யா மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின்படி,

தான் சாப்பிட்ட உணவில் கொடிய விஷம் கலந்துவிட்டதாக திவ்யா மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

கணவரிடம் விசாரணை நடத்தியபோது,  சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இவர்கள் இருவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி  தன்னிடம் இருந்து பிரிந்து செல்ல வேண்டும். இல்லையேல் கொலை செய்துவிடுவேன் என கணவர் மிரட்டியுள்ளார். பல இலட்சம் செலவு செய்து பெற்றோர் நடத்தி வைத்த திருமணம், இதனால் பிரிந்து செல்ல மனமின்றி திவ்யா இருந்துள்ளார். இந்த விடயம் காலப்போக்கில் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தியது. ஒருநாள்  திவ்யாவின் வாயில் பாதரசத்தை ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார் கணவர் பெல்லார்மின். பாதரசத்தை கைகளால் தட்டியபோது அவை நகைகளில் படிந்து அனைத்தும் சேதமடைந்தன. இதுகுறித்து தனது பெற்றோரிடம் திவ்யா தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தி கணவருடன் சேர்ந்து வாழும்படியாக அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் கணவர் பெல்லார்மின் உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். தான் சாப்பிடுவதற்கு முன் தனது நாய்க்கு கொஞ்சம் உப்புமாவை வைத்துள்ளாராம் திவ்வியா. அதனை சாப்பிட்ட நாய் இறந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா உதவி கேட்டு அலறியுள்ளார். ஆனால், கணவன் மாமனார் மற்றும் மாமியார் கண்டுகொள்ளாத நிலையில் அவரச ஊர்திக்கு போன் செய்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  திவ்வியாவுக்கு  சிகிச்சையளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய திவ்யா, 

தனக்கு விஷம் வைத்து கணவர் உணவுகொடுத்துவிட்டார் என மரணவாக்குமூலம் அளித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.

திவ்யாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பெல்லார்மின் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்துபோன நாயின் உடலும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கின் மேலதிக விசாரணைகளை பொலிஸார் பல கோணங்களில் முன்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment