ஈழத்தமிழருக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத்தமிழர் ஒருவரின் மேன்முறையீட்டு மனு மீதாக வழக்கில் பிரிட்டன் உச்ச நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளது.

இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களால் ஏற்பட்ட காயங்கள் குறித ஈழத்தமிழரின் உடலில் இருந்துள்ளது.

சித்திரவதையால் ஏற்பட்ட இந்தக் காயங்கள்  இவரால் சுயமாக மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டை பிரிட்டனின் கீழ் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்திருந்தனர்.

இதனால் இவரின் புகலிடக் கோரிக்கை வழக்கு நிராகரிக்கபட்டிருந்தது. இதனையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கில் பிரிட்டன் உச்ச நீதிமன்றம் ஈழத்தமிழருக்கு சாதகமான தீர்ப்பை  நேற்றையதினம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தீர்ப்புத் தொடர்பில் சட்டத்தரணி கணநாதன் கருத்து தெரிவிக்கையில்,

“இந்தத் தீர்ப்பானது இவ்வாறான முறையில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கபட்ட ஏனைய ஈழத்தமிழகளின் மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பான வழக்குகளுக்கும் ஒரு முன்மாதிரியான தீர்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment