சூட்கேசிற்குள் பெண் மருத்துவரின் உடல்- முன்னாள் காதலன் விபத்தில் பலி!


சிட்னியை சேர்ந்த 32 வயது பல்மருத்துவர் பிரீத்தி  ரெட்டியின் உடல்  சூட்கேசிற்குள் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல்போன 32 பிரீத்தி ரெட்டியின் உடலையே காவல்துறையினர் சூட்கேசிற்குள் மீட்டுள்ளனர்

சிட்னியின் செயின்ட் லியனார்ட்ஸ் வீதியில் இடம்பெற்ற பல்மருத்துவர்கள் மாநாட்டின் பின்னர் அவர் காணாமல்போயிருந்தார்.
பிரீத்தி  ரெட்டி சிட்னியின் ஸ்டிரான்ட் ஆர்கேட்டில் உள்ள மக்டொனால்ட் கட்டிடத்திலிருந்து தனியாக வெளியேறுவதை சிசிடிவி கமராக்கள் காண்பித்திருந்தன.
இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் கிங்ஸ்போர்ட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரை கணடுபிடித்து சோதனையிட்டவேளை காரிற்குள் சூட்கேஸ் ஒன்றினுள் பிரீத்தி ரெட்டியின் உடலை கண்டுபிடித்துள்ளனர்
அவரது உடலில் பல தடவை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்
பிரீத்தி தனது முன்னாள் காதலருடன்  மார்க்கெட் வீதியில உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் அந்த நபர் பின்னர் கார் விபத்தொன்றில் பலியாகியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஹர்சா நடே  என்ற அந்த நபரும் திட்டமிடப்பட்ட விபத்தில் பலியாகியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் காதலர் இறப்பதற்கு முன்னர் அவருடன் உரையாடியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment