மறுபிறவியில் காதலியை மணந்த வீரர்

துப்பாக்கிச் சூட்டில் உயிர்தப்பிய வங்கதேச வீரர் தனது காதலியை மணமுடித்துள்ளார்.

வங்கசேத அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மெஹிடி ஹாசன் கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்தில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நொடிப்பொழுதில் உயிர்தப்பியவர்.

அந்த அதிர்ச்சியில் இருந்து இதுவரை மீளவில்லை. மறுபிறவி எடுத்து வந்தது போல உணர்கிறேன் என சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இவர் தனது நீண்டநாள் காதலியை மணமுடித்துள்ளார். குல்னா பகுதியில் நடைபெற்ற இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

இது ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்வு என தனது பேஸ்புப் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் மெஹிடி ஹாசன்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment