இந்தப் பெண்ணைப் பார்ப்பவர்கள் உலகிலேயே நீங்கள்தான் பலசாலியான பெண் என வியந்து பாராட்டுகிறார்கள்.
ஒரு ஆண் ஒரு பெண்ணை சுமப்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோம், அப்படியிருக்க ஒரு பெண், தன் கணவரை தோளிலும் வயிற்றிலும் முதுகிலும் சுமக்கிறார் என்பது ஆச்சரியம்தானே?
அதுவும் சில மாதங்கள் முன்புதான் இப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த Virginia Tuells (38) தான் அந்த அதிசயப் பெண், அவர் சுமக்கும் காதல் கணவர் Giovanni Perez (39).
சர்க்கஸ் ஒன்றில் இந்த அரிய நிகழ்வை நிகழ்த்திக் காட்டும் Virginia, வழக்கமான சர்க்கஸ் நிகழ்வுகளுக்கு நடுவே, தாங்கள் வித்தியாசமான ஒன்றை பார்வையாளர்களுக்கு செய்து காட்ட முடிவெடுத்ததாகத் தெரிவிக்கிறார்.
Virginiaவின் ஒற்றைத் தொடையில் தன் கையை மட்டும் ஊன்றி அவருக்கு இணையாக நேர் கோட்டில் Perez நிற்க, கூட்டம் அமைதியாகிறது.
அடுத்து தன் தோளிலும், வயிற்றிலும், முதுகிலும் தன் கணவரை தாங்கி நிற்கும் Virginiaவை மூச்சு விட மறந்து பார்க்கும் கூட்டம், காட்சி முடிந்ததும் பலத்த மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.
0 comments:
Post a Comment