கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே நடித்துள்ள , சத்ரு படம் வெளியாகிறது. கதிர் ஹீரோவாக நடித்துள்ளார்.
சிறிய இடைவெளிக்கு பிறகு திரப்பக்கம் வந்துள்ள சிருஷ்டி டாங்கே பேசியதாவது,
இதற்கு முன்னர் நான் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றாலும் சில தோல்வியை தழுவின.
என்னை முழுமையாக தயார் செய்ய ஓய்வு தேவைப்பட்டது. ஓராண்டு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தேன். சத்ரு, கதை சரியாக அமைந்தது. இதற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. சத்ரு நல்ல இடத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
மகாராஷ்டிரா பெண்ணாக இருந்தாலும் தமிழ் கற்றுக் கொண்டேன். அஜித், விஜய் சேதுபதி உடன் நடிக்க ஆசை. கதையின் நாயகியை மையமாக வைத்து படங்கள் வருகின்றன.
சினிமாவில் இருக்கும் வரை என் பெயர் சொல்கிற மாதிரி நல்ல படங்கள் நடிக்கவே விரும்புகிறேன்.
நூறு படங்கள் வேண்டாம், பத்து நல்ல படங்களில் நடித்தாலே போதும். தமிழ் மக்களின் ஆதரவு என்றும் தேவை.
0 comments:
Post a Comment