திருமணத்தன்று வாந்தி எடுத்த பெண்

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண் வாந்தி எடுத்ததால் நேர்ந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ள துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவை சேர்ந்தவர் சரத்,  இவருக்கும் ரக்‌ஷா என்ற பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்தில்  இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஏற்பட்ட ஜீரண கோளாறே வாந்திக்குக் காரணம். அதிர்ச்சியடைந்த சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. 

திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.  திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரைச் சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாகவிருந்து ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார்.  

இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது. இந்த நிலையில் திருமணத்தன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக சரத் கருதினார்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடிவு செய்த சரத், வயிற்று சோதனை செய்யலாம் எனப் பொய்யாக கூறி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துவரிடம் இரகசியமாக பேசிய சரத், ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? வாந்திக்கு கர்ப்பம் காரணமா? என சோதனை நடத்துமாறு கூறினார்.

இது தொடர்பான சோதனை நடத்தப்பட்ட போது அதிர்ச்சியடைந்த ரக்‌ஷா கோபமாக மருத்துவமனையிலிருந்து தனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

கணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த சரத், ரக்‌ஷாவிடம் விவகாரத்துக் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.

அதற்குப் பதிலடியாக ரக்‌ஷா, தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதற்காக சரத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment