டுவிட்டரில் புது வசதி

டுவிட்டர் தளத்தில் ஹைட் ட்விட் (Hide Tweet) எனும் செயல்முறை ஒன்று வழங்கப்படவிருக்கிறது.  டுவிட்டர் இதை வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறது.

புதிய ஹைட் டுவிட் அம்சம் மூலம் பயனர்கள் தங்களது உரையாடல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

டுவிட்டரின் புதிய அம்சம் பயனர் டுவிட்களை ஷேர் செய்யும் ஆப்ஷனை க்ளிக் செய்தால் தெரியும். ட்விட்டரில் பயனரை மியூட் அல்லது பிளாக் செய்வதற்கு மாற்றாக உரையாடல்களை கட்டுப்படுத்துவதற்கு ஹைட் டுவிட் பயன்படும்.

இதுதவிர வியூ ஹிடன் ட்விட்ஸ் (View Hidden Tweets) எனும் அம்சத்தை ட்விட்டர் உருவாக்கி வருவதாக தெரிகிறது.

இதன் மூலம் பயனர்கள் ஏற்கனவே ஹைட் செய்த ட்விட்களை அன்-ஹைட் செய்யலாம். புதிய அம்சம் வழங்கப்படுவதை டுவிட்டர் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளார்.

தற்சமயம் மியூட் மற்றும் பிளாக் செய்வதை போன்றே இயங்கும் இந்த அம்சம் ட்விட்டரில் அனைவருக்கும் மற்றவர்களை அமைதிப்படுத்தும் வசதியை வழங்கும்.

இது பயனர்களை மறைக்கப்பட்ட ரிப்ளைக்களை க்ளிக் செய்து பார்க்க வேண்டும். மறுபுறம் பயனர் விரும்பும் பதில்களை மட்டும் பதிவிடும் வசதி பலருக்கும் பயனுள்ளதாகவே இருக்கும்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment