தன்னை விட கிட்டத்தட்ட 20 வயது அதிகமான சொந்த சித்தியை இளைஞர் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த சம்பவம் சிம்பாவே நாட்டில் நடந்துள்ளது.
ஷிபோ முகடி என்ற பெண்ணின் கணவர் மைக் மாவி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த நிலையில் மைக்கின் சகோதரர் முன்யார்டியின் மகன் ஆண்டனி (25) தனது சித்தியான ஷிபோவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தன்னை விட கிட்டத்தட்ட 20 வயது அதிகமான ஷிபோவை, ஆண்டனி திருமணம் செய்து கொண்டது அவர்களின் குடும்பத்தவர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து ஷிபோ கூறுகையில், என் கணவர் நோய் வாய்ப்பட்டிருந்த போது ஆண்டனி தான் அவருக்கு உதவிகள் செய்தார். அவர் இறந்த பின்னர் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம், என்னை வேறு சிலரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். ஆனால் எனக்கு ஆண்டனியை மணக்கவே விருப்பம் இருந்தது.
எங்கள் வயது வித்தியாசம் மற்றும் உறவுமுறை குறித்து யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment