வவுனியா நெடுங்கேணி பகுதியில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் நேற்று மாலை மீட்கப்பட்டன.
விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.
நெடுங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரம் ஒன்றில் இறுகிய நிலையில் குறித்த மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டது.
இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment