டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா அபராதம்

பிரபல வீடியோ செயலியான டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா ரூ.40 கோடி அபராதம் விதித்துள்ளது. 

சிறுவர்களின் தகவல்களை அனுமதி இல்லாமல் திரட்டியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் பயன்படுத்தும் செயலி என்றால் அது டிக்டாக் செயலி தான். இந்த செயலியை வயது வித்தியாசம் இன்றி எல்லோருமே பயன்படுத்துகிறார்கள். 

ஒரு பாடலையோ, இசையையோ அல்லது வசனத்தையே பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற் போல் வாயை அசைப்பது மற்றும் நடிப்பது போன்றவை இந்த செயலில் செய்யப்படுகிறது.

முன்னதாக மியூசிக்கலி என்ற பெயரில் இயங்கி வந்த வீடியோ செயலியையும் கடந்த 2017 இல் டிக்டாக் செயலி தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த நிலையில் 13 வயதுக்குக் குறைவான குழந்தைகள், செயலிகளைப் பயன்படுத்தும் முன்னர் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது அமெரிக்கச் சட்டத்தின்படி அவசியம். ஆனால் அதை டிக் டாக் கடைபிடிக்கவில்லை.

குழந்தைகளின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற  சொந்த விவரங்களைப் பெறும் முன்னர், பெற்றோரிடம் அனுமதி பெறவேண்டிய கட்டாயத்தை டிக் டாக் செயல்படுத்தவில்லை. தங்களின் செயலியை ஏராளமான குழந்தைகள் பயன்படுத்துவது தெரிந்தும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கவில்லை.

இந்த அபராதம் குழந்தைகளைக் குறிவைக்கும் அனைத்து இணையதள சேவைகளுக்கும் இணையதளங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான சட்டத்தை மீறும் நிறுவனங்களை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம்'' என்று அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment