வரவேற்பு வளைவை மீளவும் அமைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு அமைக்கும் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற போது இரு மதத்தினருக்கிடையில் இடம் பெற்ற முறண்பாடுகளைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதோடு, குறித்த வரவேற்பு வளைவு உடைத்து சேதப்படுத்தப்பட்டது.


இந்த நிலையில்,குறித்த வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.


குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை(4) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் இ.கயஸ்பெல்டானோ அகற்றப்பட்ட குறித்த வரவேற்பு வளைவினை தற்காலிகமாக மீண்டும் அமைத்து எதிர் வரும் நான்கு நாட்களுக்கு வைக்குமாறு திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கினார்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment