சொகுசுப் பேருந்துகளில் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் சொகுசு பேருந்துகள் பாரிய விபத்துக்களில் சிக்கி விடுகிறது

இவ்வாறான விபத்துக்களால் பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். யாரை நம்பி பேருந்தில் பயணிப்பது என்றும் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்லும் அதி சொகுசுப் பேருந்துகளின் அண்மைக்கால விபத்துக்களால் இதுவரை சுமார் ஐம்பதுபேர் வரையில் காயமடைந்துள்ளனர். 5 பேர் உயிரிழந்துமுள்ளனர்.

சாரதிகளின் தூக்கக் கலக்கமா???  கவனவீனமா???  அல்லது அவர்களின் அசண்டையீனமா???  இதில் எதுதான் விபத்துக்களுக்கு காரணம் ????

பல்வேறு பகுதிகளிலும் கொழும்பு பயணத்துக்கான ஆசன முற்பதிவுகள் நடைபெற்று யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான பயணம் ஆரம்பிக்கப்படுகிறது. சொகுசுப் பேருந்து என்பதால் இலகுவாக உட்கார்ந்து விடுகிறார்கள் பயணிகள். சாரதியை நம்பித்  தூங்கியும் விடுகின்றனர். 

பயணிகள் தூங்கினால் சுகப்பயணம், சாரதி தூங்கினால் அதுவே கடைசிப் பயணம் என்பது இன்று மிக இலகுவாக நாளாந்தம் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கிறது.

இதுபோன்ற பல பேருந்துகளின் அதிகூடிய வேகத்தால் கடந்த மூன்று மாதங்களுக்குள் சுமார் ஐந்து  பேருந்துகள் பாரிய விபத்துக்களில் சிக்கி சின்னாபின்னமாகியது.

கடந்த 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து,  வீதியில் தரித்து நின்ற டிப்பருடன் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. ஆபத்தான நிலையில்  சுமார் 15 பயணிகள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே மாதம் 18 ஆம் திகதி வவுனியாவிலிருந்து கொழும்பு  சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளனதில் நால்வர் உயிரிழந்தனர்.   மேலும் பலர் படுகாயமடைந்னர். மஹவெவ சிலாபம் பகுதியில் மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதில் இந்த விபத்து நடந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 பெப்பரவரி 26 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ் வந்துகொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று ஏ9 வீதியின் மாங்குளம் பகுதியில் விபத்துக்குள்ளாகியது. இந்தச் சம்பவத்தில் சாரதியின் உதவியாளர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து பாதையை விட்டு விலகி நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

நாத்தாண்டிண வலஹப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண்கள் மூவர் சாவடைந்தவனர் மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். 

இவ்வாறு தொடர்ச்சியாக அதி சொகுசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகி வருகிறது.

யாரை நம்பி நாம் பேருந்தில் பயணிப்பது என்ற கேள்வியுடனும் அச்சத்துடனும் பயணிக்கிறார்கள்  மக்கள் தமது கடமைகளை நிறைவேற்ற.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment