சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை நிர்மலா. இவர் அருகில் உள்ள பள்ளிச் சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நிர்மலா, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை ஒத்தக்கடையில் தனி அறை ஒன்றில் வைத்து, 4 நாள்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, குறித்த சிறுவன் தனது பெற்றோரிடம் தகவல் அளித்துள்ளார். சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
ஆசிரியை நிர்மலாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment