வவுனியாவில் தாய் மற்றும் பிள்ளை மீது சிறிய பாரவூர்தியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய் தனது குழந்தையை சுமந்தவாறு பாதசாரி கடவை ஊடாக வீதியை கடக்க முற்பட்ட வேளை, வவுனியா திசையில் இருந்து கிளிநொச்சி பகுதி நோக்கி பயணித்த பாரவூர்தி, அவர்கள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
#Accident #Vavuniya #BreakingNews #Canter #PregnantLady #Child #Emergency #Traffic #PoliceInvestigation #TamilNewsKing
0 comments:
Post a Comment