மைத்திரி ஆட்சியில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள்

மகிந்த ஆட்சியில் இளைஞர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சகல வேலைத்திட்டங்களும் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும.

நாடாளுமன்றில் இடம்பெற்ற பிரதமரின் தேசியக்கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், மற்றும் புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி,  திறன்கள் அபிவிருத்தி,இளைஞர் அலுவல்கள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

இந்த வரவு செலவு திட்டத்தில் ஒருசில நல்ல திட்டங்கள் உள்ளன. அதனை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் மிக மோசமான பல யோசனைகளை உள்ளன. 

இன்று நாட்டின் பொருளாதாரச் சுமை அதிகரித்துள்ளது. வெறுமனே புள்ளிவிபரங்களை வைத்துக்கொண்டு செயல்பட முடியாது. எமது கடன் சுமை அதிகரித்துள்ளது.

ரூபாவின் வீழ்ச்சிக்கு என்ன தீர்வு, வேலையின்மை எண்ணிக்கை  அதிகரித்துள்ளது, வெளிநாட்டு இருப்பு குறைவடைந்துள்ளது. 

அதேபோல் இந்த நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியின் பின்னரே வீழ்ச்சி கண்டது என்பதே அரசின் தர்க்கமாக உள்ளது. 

ஆனால் அரசின்  நான்கு ஆண்டுகளில் பொருளாதார தரம் வளர்ச்சியிலா இருந்ததா? இல்லை, இது முழுப் பொய் என்றார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment