தரிசிக்கச் சென்ற பிக்கு உயிரிழப்பு

சிவனொளிபாதமலைக்கு சென்ற பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்போடியாவைச் சேர்ந்த 91 வயதுடைய பௌத்த பிக்குவான சம்பிரான் நெட்  என்பவரே உயிரிழந்தவராவார்.

மார்பு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சாவடைந்ததாத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10 ஆம் திகதி சிவனொளிபாதமலையில் தரிசனம் செய்து விட்டு திரும்பிய நிலையில்  அவருக்கு திடீரென மார்பு வலி ஏற்பட நல்லதண்ணியில் உள்ள அவசரசிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார். 

மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதாரவைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்ததாக என வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment