வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமந்தை சேமமடு பகுதியில் வயல் காவலிற்காக இருந்த இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இருவரையும் பொலிஸ் வாகனத்தில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.
0 comments:
Post a Comment