வடமாகாண ஆளுனர் நாளை ஜெனீவா பயணம்...

அரசாங்கமும் தமிழ் மக்களும் தன்னிடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்ற அடிப்படையில் ஜெனிவாவில் செயற்படவேண்டிய ஒரு கடினமான நிலைமையை எதிர்க்கொண்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையில் ஒரு பாலத்தை கட்டியெழுப்பும் ஒரு கடினமான பாதையில் பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிகைள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் இலங்கை குழு நாளைய தினம் ஜெனிவாவிற்கு பயணமாகவுள்ளது. இந்த குழுவில், வெளிவகார அமைச்சர் திலக் மாரபன, வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி மன்றாடியார்கள் நாயம் ஏ.நெரீன்புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்தநிலையில், ஜெனிவா பயணிப்பதற்கு முன்பதாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், குறித்த விடயங்களை தெரித்தார். ஜெனிவா விடயத்தில் தான் யாருடைய சந்தர்ப்பத்தையும் பறித்துக்கொள்ளவில்லை என தெரிவித்த அவர், எனவே எவரும் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.



Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment