தமிழர் நீதிக்காய் போராடுவோம் - பிரிட்டன் எம்.பிக்கள் உறுதி

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே  இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு நாம் தொடர்ந்தும் போராடுவோம். இந்த விடயம் பிரிட்டன் நாடாளுமன்றில் பலமாக ஒலிக்கின்றது. இந்த நிலையில், இலங்கையில் போர்க் காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - என்றார்.

 இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று தமிழர்களுக்கான பிரிட்டன் அனைத்துக் கட்சிக் குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment