திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்ட நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க.
நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நயன்தாரா உள்பட படத்தின் கலைஞர்கள் அனைவரும் பங்கு பெற்றனர். இதில் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார்.
இதில் நயந்தாரவை பற்றி நடிகர் ராதாரவி பேசிய பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பாக தி.மு.கவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக தி.மு.கவிலிருந்து நீக்கிவைக்கப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
#RadhaRavi #Nassar #Nayanthara #VigneshShivan #MKStalin #Kanimozhi #PressMeet #ViralSpeech #TamilNewsKing
0 comments:
Post a Comment