தோப்பூர் மதனியா பெண்கள் அரபுக் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் உத்தியோகபூர்வமாக நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை , மூதூர் பகுதியில் உள்ள இப் பாடசாலையின் நுழைவாயிலை துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் திறந்து வைத்தார்.
அரபுக் கல்லூரி அதிபர் ஏ.எச். அஷ்ஷெய்க் ஜரூஸ் மௌலவி தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
இதில், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ், ஜெஸீலா, சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.அன்வர், மூதூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜீ.நிஸ்மி, தோப்பூர் வட்டாரத் தலைவர் முஜாஹித் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment