மன்னார் புதைகுழி பரிசோதனை அறிக்கை நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பு

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கப் பெற்றுள்ளது. 

இத் தகவலை அகழ்வு பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் கார்பன் பரிசோதனைக்காக   அமெரிக்காவின் புளோரிடா  ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாள்களில் கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கப்பட்ட போது, சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு இன்று கிடைக்கப் பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment