கோட்டாபய வெளியிட்டுள்ள அதிரடி கருத்து!



நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கௌரவமாக வாழ்க்கூடிய நிலைமையை தமது அடுத்த அரசாங்கத்தில் ஏற்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
கம்பளையில் நேற்று இடம்பெற்ற எலிய அமைப்பின் பொதுமக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
சுதந்திரம் கிடைக்கப்பெற்று 72 ஆண்டுகள் கடந்த பின்னரும், தமிழ் மக்களின் பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் என்று பேசுகின்றோம்.
 
ஆனால், உண்மையாகவே சிங்களம், தமிழ், முஸ்லிம் என்பதில் பிரச்சினை இல்லை.
 
நாட்டு மக்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற வருமானம் உள்ளதா? பிள்ளைகளுக்கு சிறந்த பாடசாலை உள்ளதா? பொருத்தமான தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளதா? சுகாதார வசதி உள்ளதா? தாம் வாழ்வதற்கு சிறந்த வீடும், சூழலும் உள்ளதா? என்பதே பிரச்சினையாகும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எனவே, வறுமையே நாட்டிலுள்ள பிரச்சினையாகும்.
 
இந்த நிலையில், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கௌரவமாக வாழ்க்கூடிய நிலைமையை தமது அடுத்த அரசாங்கத்தில் ஏற்படுத்த உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தவொரு நபரும், தமது சமயத்தை பின்தொடர்வதற்கு  இதுவரை இல்லாத சுதந்திரத்தை தாம் ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment