கூட்டமைப்பின் எடுத்தரைப்பையடுத்து, கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
கேப்பாப்பிலவு மக்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக உள்ளது எனக் கூட்டமைப்புக் குழுவினர் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து, கூட்டமைப்பினர் முன்னிலையில் இராணுவத் தளபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி, உடனடியாக கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment