அதிபர் வேண்டாம் எனக் கோரி ஆர்ப்பாட்டம்


அதிபர், வேண்டாம் எனக் கோரி  சுமார் 50 ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தில் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சமனெலிய சிங்கள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களே  ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். முன்னெடுத்தனர்.


பாடசாலையின் அதிபர் கடந்த 8 நாள்களாக பாடசாலைக்கு வருகை தரவில்லை.   இப் பாடசாலைக்கு அதிபர் வருகைதந்த காலம் தொட்டு, பாடசாலைக்கு எதுவித  அபிவிருத்தியும் இல்லை என்பதால்,  மாணவர்களின் பெற்றோர்கள்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


பாடசாலை கற்றல் நடவடிக்கையும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.  கற்றல் நடவடிக்கைகள் 10 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் போய்விட்டது. ஆசிரியர்கள் பற்றாக்குறையும் இங்கு நிலவுகின்றது. 

வலய பணிப்பாளர் முன்வந்து உடனே இவரை இடமாற்றம் செய்ய வேண்டும்.


கல்வி அமைச்சர் முன்வந்து இந்தப் பாடசாலை தொடர்பான தகவல்களைப் பெற்று உடன் பாடசாலையின் கல்வி வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வழி செய்ய வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment