வெளிநாட்டுப் பெண் துஷ்பிரயோகம் ; சாரதி கைது

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்

குறித்த பெண் ஹிக்கடுவ பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலனை அழைத்து வருவதற்கு  வாகனம் ஒன்றிற்காக காத்திருந்த ஹங்கேரி நாட்டு பெண்ணே ஹிக்கடுவ பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடத்தி செல்லப் பயன்படுத்திய வாகனமும் ஹிக்கடுவை பொலிஸார் தங்கள் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர் பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாதவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் ஹிக்கடுவ பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரான சாரதி இந்த பெண்ணை தொடன்துவ பாலத்திற்கு அருகில் வாகனத்திற்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment